Monday, October 21, 2013

ஆதி பர்வம் பக்கம் 6-15

பக்கம் 6

பிரஜை - குடி, சந்ததி

அண்டம் - முட்டை, பூமி, வானம், பிரபஞ்ச உருண்டை

பிரஜாபதி - பிரமன், உபப்பிரம்மா, அரசன்

ஸ்தாணு - உருத்திரளுள் ஒருவர்

ஸ்வாயம்புமனு - பிரம்ம புத்திரர்

ஸம்காரம் - அழிப்பு
[ஸம்ஸ்காரம் - பண்பாடு]

ருது - வசந்தருது. கிரீஷ்மருது. வர்ஷருது, சரத்ருது. ஏமந்தருது. சிசிரருது என்ற ஆறுபருவங்கள்

பக்கம் 7

ஸ்ருஷ்டி - படைத்தல், கற்பனை செய்தல்

உபாக்கியானம் - கிளைக்கதை

லக்ஷணம் - இலக்கணம், சாசனப்பத்திரம்

ஸங்க்ரஹம் - சுருக்கம்

பக்கம் 8

சிலாக்கியம் - மெச்சத்தக்கது, சிறந்தது, புகழ், உரிமை

ஸமர்த்தர் - திறமையானவர்

பக்கம் 9

நிச்சயம் - உறுதி, மெய், துணிவு

பக்கம் 10

கல்பங்கள் - பல யுகங்கள்

வஸ்து - பொருள்

பாசுபதம் - நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.

ஆஶ்ரமம் - குடில்; ப்ரம்மசர்யம், இல்லறம், வன வாழ்க்கை, துறவறம் எனும் படிநிலைகள்


ஹிந்து தர்மத்தின் படி,
முதலாம் பருவம் ப்ரும்மச்சர்யாஸ்ரமம் (தனக்காய்க் கற்றலும், கேட்டலும்);
இரண்டாம் பருவம் க்ருஹஸ்தாஸ்ரமம் (தன் குடும்பத்தின் பொருட்டுப் பொருளீட்டலும், இனவிருத்தியும்);
மூன்றாம் பருவம் வானப்ரஸ்தாஸ்ரமம் (தன் சமூகத்தை முன்னிறுத்திப் பொருட்பற்றைத் துறந்து புண்ணியம் எய்துதல்);
நான்காம் பருவம் சன்யாஸஆஸ்ரமம் (எல்லாவற்றையும் துறந்து வீடு பேறு எய்தல்)

அஞ்சனசலாகை - கண்ணுக்கு மையெழுதுங்கோல்

புருஷார்த்தங்கள் - அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய உறுதிப் பொருள்

பக்கம் 11

ஸங்கிரகம் - சுருக்கம்

ஸ்தானம் - இடம், உறைவிடம், சுவர்க்கம், ஆசனம்

அபீஷ்டம் -  விரும்பிய, அன்புள்ள

பக்கம் 12


உத்க்ருஷ்டம் -  சிறந்த; உயர்ந்தரகமான; 

(உயரமாக) எழுப்பப்பட்ட; (முழுபலத்துடன்)


பிடுங்கப்பட்ட,  (ஆழமாக)உழப்பட்ட‌
ஸர்வஜ்ஞர் - முற்றறிவினர்

சேதித்தல் - வெட்டுதல், அழித்தல்

ஸங்கியை - எண், எண்ணிக்கை, புத்தி

கவடு - மரக்கிளை

பக்கம் 13

சிஷ்டர்  -  நமக்கு வேண்டியவர், நெருங்கியவர், 

அண்மையானவர்(துஷ்டருக்கு எதிர்பதம்)

பக்கம் 14

துந்துபி - பேரிகை

பராக்கிரமம் - வீரம், வல்லமை

வினயம் - மரியாதை, அடக்கம்

பர்த்தா - கணவன்

தக்ஷிணை - குருமுதலிய பெரியோர்க்குக் கொடுக்கும் பொருள்

உபாயம் - உத்தி,ஆரம்பம்,முயற்சி,செயல்படல், வழிமுறை, சூழ்ச்சி


பக்கம் 15

வஸ்திரம் - துணி

உத்தரீயம் - மேலாடை, மார்பிலும் முதுகிலும் அணியும் படங்களுள்ள இருதுணித்துண்டு

யஜ்ஞம் - யாகம்

நிர்மாணம் - உருவாக்குதல்,படைத்தல்,செய்தல்

பரிதபித்தல் - வருந்துதல், துக்கித்தல்

தகித்தல் - எரித்தல், உஷ்ணஞ்செய்தல்

அப்பிரியம் - வெறுப்பு, வெறுப்பான செயல்

4 comments:

  1. ஆதி பர்வம் பக்கம் 6-15
    பக்கம் 6

    ஸம்காரம் - ??????

    ஸம்ஹாரம் - அழிப்பு,
    ஸம்ஸ்காரம் - பண்பாடு. refinement

    -----------------

    பக்கம் 7

    ஸங்க்ரஹம் - ??????

    ஸங்க்ரஹம் - சுருக்கம். in a nutshell

    --------------------

    பக்கம் 10

    ஆஶ்ரமம் - ??????

    ஆஶ்ரமம் - குடில், hermitage
    ப்ரம்மசர்யம், இல்லறம், வன வாழ்க்கை, துறவறம்
    எனும் படிநிலைகள்



    தேவ்

    ReplyDelete
  2. உத்க்ருஷ்ட= சிறந்த,உயர்ந்தரகமான,(உயரமாக) எழுப்பப்பட்ட, (முழுபலத்துடன்)
    பிடுங்கப்பட்ட, (ஆழமாக)உழப்பட்ட‌

    நிர்மாணம்= உருவாக்குதல்,படைத்தல்,செய்தல்

    உபாயம்=உத்தி,ஆரம்பம்,முயற்சி,செயல்படல்

    சிஷ்டர்= நமக்கு வேண்டியவர், நெருங்கியவர், அண்மையானவர்(துஷ்டருக்கு எதிர்பதம்)

    அபீஷ்டம்= விரும்பிய, அன்புள்ள,

    ReplyDelete
  3. சிஷ்டர்= நமக்கு வேண்டியவர், நெருங்கியவர், அண்மையானவர்

    தவறு, ‘ஆப்தர்’ எனும் சொல்லே நீங்கள் நினைக்கும் பொருளைத் தருகிறது.

    பார்ப்பனச் சிட்டர்கள் [வாரணமாயிரம்]
    மறைவழி நிற்போர்

    ReplyDelete
  4. நன்றி நண்பர்களே! மாற்றிவிட்டேன்.

    ReplyDelete