Tuesday, October 22, 2013

ஆதி பர்வம் 16 - 31 வரை

பக்கம் 16

அனுசரித்தல் - பின்பற்றுதல், ஆமோதித்தல், வழிபடுதல், கொண்டாடுதல்

படிதல் - வசமாதல், கீழ்ப்படிதல்

பரிஹாஸம் - பகடி, நிந்தனை, விளையாட்டு

ஸகாயம் - துணை

பக்கம் 18

விருத்தர்கள் -  (அநுபவத்தால்) முதிர்ந்த பெரியோர்கள்;

அடுத்தல் - சமீபமாதல்

ஸத்திய ஸந்தன் - உண்மை பேசுபவன்

கிரமம் - ஒழுங்கு, நீதிமுறை

ஸம்மதி - சம்மதம், உடன்படுதல்

அப்பியாசம் - பழக்கம், பாடப்பயிற்சி

த்யூதம் - சூதாட்டம்

கோஷம் - இடைச்சேரி

ஸூதன் - தேர்ப்பாகன்

பக்கம் 19

அஜ்ஞாதவாஸம் - தலைமறைவு வாழ்க்கை

நிமித்தம் - காரணம்

சிரேஷ்டர் - தலை சிறந்தவர்

ஶ்ரீயப்பதி - திருமால்

தீக்ஷித்தல் - நோக்கம், தொடுகை, உபதேசம் முதலியவற்றால் அருளுடன் குடு தீட்சை செய்வித்தல்; விரதநியமம் பூணுதல்; பேரூக்கங்காட்டுதல்


பக்கம் 20

மோஹம் - மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி

கியாதி - புகழ்

மார்க்கம் - வழி

ஸோமகர்கள் - பாஞ்சாலர்கள்

சரதல்பம் - அம்புகளாலாகிய படுக்கை

வ்யூகம் - சேனையின் வகுப்பு


பக்கம் 22

ஸவ்யஸாசி - அர்ஜுனன்; இடக்கையினாலும் பாணத்தை எய்பவனென்பது

பிராயோபவேஷம் - ப்ராயோபவேஶம் - வடக்கிருத்தல் [சமணர் சல்லேகனை என்பர்]

மண்டலம் - வட்டம்; மந்திர சக்கரம்; பரிவேடம்

பிரதிஜ்ஞை - சபதம், ஆணை


பக்கம் 26

ஸம்பத்து - செல்வம், பொன்

ரக்ஷித்தல் - காத்தல்


பக்கம் 27

பதார்த்தம் - சொற்பொருள்;  வஸ்து;     திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேஷம், சமவாயம், அபாவம் என நியாயசாஸ்திரத்தில் வழங்கும் எழுவகைப்பொருள்கள்

விருத்தாந்தம் - வரலாறு ; கதை ; நிகழ்ச்சி ; செய்தி ; இயல்பு ; விதம் ; முழுமை ; இளைப்பாறுகை .

பக்கம் 28

ஜன்மாந்திரம் - மறுபிறப்பு

அத்யாத்மம் - ????

யதி - துறவி

ஓஷதி -  மருந்திற்குரிய பூடு முதலியவை , வருஷத்தில் ஒருமுறைகாய்த்துப்படுஞ்செடி

சிராத்தம் - இறந்தோர்பொருட்டுச் செய்யுஞ் சடங்கு


பக்கம் 30

ஸந்தி = கூடுகை

சஸ்திரதாரி = ஆயுதமேந்தியவர்

அக்ஷௌஹிணி = 21870 ரதங்கள் + 21870 யானைகள் + 1,09,350 பதாதிகள் + 60,610 குதிரைகள்

பக்கம் 31

பதாதிகள் - காலாட்படை

வைராக்கியம் - உலகப்பற்றின்மை, விடாப்பிடி

வியவஸ்தை - முடிவான ஏற்பாடு, வித்தியாசம்

பதம் - பக்குவம், இனிமை. வழி

உபதேசம் - ஞானபோதனை, மந்திரோபதேசம்

சிரேயஸ் - ஆன்மீக ஈடுபாடு  [ஆன்மிக மேன்மை]

2 comments:

  1. ஆதி பர்வம் 16 - 31 வரை

    பக்கம் 19
    அஜ்ஞாதவாஸம் - ????? [தலைமறைவு வாழ்க்கை]

    பக்கம் 22
    பிராயோபவேஷம் - ????
    ப்ராயோபவேஶம் - வடக்கிருத்தல்
    [சமணர் சல்லேகனை என்பர்]

    பிரதிஜ்ஞை - ???? [சபதம், ஆணை]

    பக்கம் 28
    அத்யாத்மம் - ????
    अध्यात्म - the Supreme Spirit
    own , belonging to self


    அர்ஜுனன் - சரி , ஜூ இடுவது தவறு

    பக்கம் 30
    சஸ்திரதாரி = ????? [ஆயுதமேந்தியவன்]

    சிரேயஸ் - ஆன்மீக ஈடுபாடு [ஆன்மிக மேன்மை]

    ReplyDelete
  2. நன்றி திரு.தேவ். மாற்றிவிட்டேன்.

    ReplyDelete