Monday, October 28, 2013

பக்கம் 32 முதல் 57 வரை

பக்கம் 32

சத்துரு - பகைவன்

ஸைன்யம் - சேனை

பீடித்தல் - துன்புறுத்தல்

மோக்ஷம் - விடுபடுகை; முத்திநிலை; பதமுத்தி

பக்கம் 33 

வேதார்த்தம் -  வேதம் + அர்த்தம்= வேதத்தின் பொருள்

பக்கம் 34

தயை - தயவு

பதிவிரதை - கற்புடைமனைவி

பக்கம் 35

ரதர்  - தேர்படை வீரர் 

அதிரதர் - தனி ஒருவராக பலருடன் போர் புரியும் தேர் படை வீரர்

த்வீபம் - தீவு

பக்கம் 36

சிக்ஷித்தல் - கடுமையாக தண்டிப்பது

ஞாதா - உறவினர்;பங்காளி 

பக்கம் 37

கிலம் - துண்டு நிலம்,பிற்சேர்க்கை;விட்டுப்போன நூற்பகுதி

உபந்யஸித்தல் - உபன்யாசம் செய்தல்=விரிவுரை ஆற்றுதல்

பக்கம் 38

ஸ்தாபித்தல் - நிலைநிறுத்துதல், ருசுப்படுத்துதல், பிரதிட்டை செய்தல்.

மந்திராலோசனை - அமைச்சர் அளிக்கும் அறிவுரை;அரசனுக்கு மந்திரி அளிக்கும் ஆலோசனை

மிலேச்ச பாஷை -- வேற்று நாட்டவரின் மொழி

ஆஜ்ஞை - கட்டளை

பக்கம் 39

கோதனம் - பசுக்கன்று; பசுச்செல்வம்

விசாரம் - கவலை

பக்கம் 40

துர்க்கம் - அரண்

பரிகசித்தல் - பகடி செய்தல்; நிந்தனை செய்தல்; விளையாடுதல்

பக்கம் 41

ஆராதனம் - பூசை

ஹிதம் - இன்பமானது; நன்மை

பக்கம் 42

ஸம்வாதம் - தர்க்கம்

பிரிதிஜ்ஞை - சபதம்; ஆணை

ஆத்மஜ்ஞானி - மெய்ப்பொருள் அறிந்தவர்;பேரருள் கிட்டியவர்

சமாசாரம் - செய்தி

பக்ஷித்தல் - நொறுக்குத்தீனி(பட்சணம்) சாப்பிடுவதுபோல உண்பது;உண்டு செரிப்பது

ஜிதேந்திரி -  (ஐந்து)இந்திரியங்களை வென்றவர்


பக்கம் 43

தார்க்கிகர் - தர்க்கம்,வாதம் செய்பவர்

பக்கம் 44

பூர்ணம் - முழுமை; நிறைவு

ஸமாஸ்யை - ஸமாஸ:தொகுப்பு, சேர்க்கை, கலவை, தொடர்ச்சொல்கூட்டு,  முழுவதும், சுருக்கம், நிறைவு

கோஷம் - இடைச்சேரி

ஸ்வப்னம் - கனவு

பக்கம் 45

ஶ்மசானம் - சுடுகாடு

ஸமர்த்தர் - சாமர்த்தியம் உள்ளவர்;திறனாளி,திறமையாளர்

சாரர்கள் - திறமை,சக்தி,உள்ளவர்கள்

வ்ருத்தாந்தம் - விஷயம்

கோக்ரஹணம் - =பசுக்களைப் பிடித்தல்

பக்கம் 46

அபேக்ஷித்தல் - விரும்புதல்

உபசாரம் - சேவை; காணிக்கை; மரியாதை

வாக்குத்தத்தம் - சத்தியம்

பக்கம் 47 

விரோதசமனம் - பகையை சமன்படுத்துதல்;பகையை இல்லாமல் செய்தல்

மித்திரபேதம் - நண்பர்களுக்கு இடையில் வேற்றுமை உண்டாக்குதல்

ஸந்திவிக்ரஹங்கள் - பல புதிய பாத்திரங்கள் நிகழ்வுகள் திருப்பங்கள்

தர்மாதர்மப்ரமம் - தர்மம் அதர்மம் முறை;அறம் அறமற்றதுபற்றிய முறை அறித

பக்கம் 48 

மகாரதர் - 10000 பேருடன் தனித்துபோர்புரியும் தேர் போராளி

பக்கம் 49

தூஷணம் - நிந்தை, கண்டனம்

பிராணஸந்தேஹம் - உயிரைப்பற்றிய சந்தேகம்

பரஸ்பரம் - ஒருவர்க்கொருவர் அல்லது ஒன்றுக்கொன்


பக்கம் 50

ஸ்தம்பம் - தூண்;அசையாமல் நிற்றல்

தூஷித்தல் - பழித்தல்

பக்கம் 51

பரிஜனங்கள் - ப‌ரிவாரம்,பிந்தொடரும் கூட்டம்,உடன்வரும் உறவினர்,நண்பர்கள்

பிரம்மநிஷ்டர் - கடவுள் சிந்தனையில் தவம் புரிபவர்

பிரபாவம் - மேன்மை, கீர்த்தி, ஒளி, வலிமை

பக்கம் 53

மாதுலர் - மாமன்மார்;

ஸஞ்சாரம் - யாத்திரை ; நடமாட்டம் ; சஞ்சரித்தல் ; நெறிதப்பிய ஒழுக்கம் ; நடனத்துக்குரிய பாத வைப்புவகை ஐந்தனுள் ஒன்று ; ஏற்ற இறக்கக் கலப்பு .

கடோரம் கடினம் ; கொடுமை .


பக்கம் 55

பானம் - குடிக்கை ; குடித்தற்கு நீர் அளிக்கை ; கள் ; பருகும் உணவு .

தேகஸம்ஸ்காரம் - இறந்த உடலுக்கான சடங்கு(எரியூட்டுதல்,புதைத்தல்)

ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடுதல்

பிரஜ்ஞை - நினைவு, உள்ளுணர்வு, ஆழ்மன நினைவு


பக்கம் 56

வியாஜம் - போலிக்காரணம்

இந்திராதி - இந்திரன் உடன் கூடிய(தேவர்கள்) 

பக்கம் 57

பிரவிர்த்தித்தல் - பிரவிருத்தி, பிரயத்தனப்படுதல், முயற்சி

விருத்தி  - ஒழுக்கம், சுபாவம், தொழில்

அடுத்தல் - சேர்தல், சார்தல்





Tuesday, October 22, 2013

ஆதி பர்வம் 16 - 31 வரை

பக்கம் 16

அனுசரித்தல் - பின்பற்றுதல், ஆமோதித்தல், வழிபடுதல், கொண்டாடுதல்

படிதல் - வசமாதல், கீழ்ப்படிதல்

பரிஹாஸம் - பகடி, நிந்தனை, விளையாட்டு

ஸகாயம் - துணை

பக்கம் 18

விருத்தர்கள் -  (அநுபவத்தால்) முதிர்ந்த பெரியோர்கள்;

அடுத்தல் - சமீபமாதல்

ஸத்திய ஸந்தன் - உண்மை பேசுபவன்

கிரமம் - ஒழுங்கு, நீதிமுறை

ஸம்மதி - சம்மதம், உடன்படுதல்

அப்பியாசம் - பழக்கம், பாடப்பயிற்சி

த்யூதம் - சூதாட்டம்

கோஷம் - இடைச்சேரி

ஸூதன் - தேர்ப்பாகன்

பக்கம் 19

அஜ்ஞாதவாஸம் - தலைமறைவு வாழ்க்கை

நிமித்தம் - காரணம்

சிரேஷ்டர் - தலை சிறந்தவர்

ஶ்ரீயப்பதி - திருமால்

தீக்ஷித்தல் - நோக்கம், தொடுகை, உபதேசம் முதலியவற்றால் அருளுடன் குடு தீட்சை செய்வித்தல்; விரதநியமம் பூணுதல்; பேரூக்கங்காட்டுதல்


பக்கம் 20

மோஹம் - மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி

கியாதி - புகழ்

மார்க்கம் - வழி

ஸோமகர்கள் - பாஞ்சாலர்கள்

சரதல்பம் - அம்புகளாலாகிய படுக்கை

வ்யூகம் - சேனையின் வகுப்பு


பக்கம் 22

ஸவ்யஸாசி - அர்ஜுனன்; இடக்கையினாலும் பாணத்தை எய்பவனென்பது

பிராயோபவேஷம் - ப்ராயோபவேஶம் - வடக்கிருத்தல் [சமணர் சல்லேகனை என்பர்]

மண்டலம் - வட்டம்; மந்திர சக்கரம்; பரிவேடம்

பிரதிஜ்ஞை - சபதம், ஆணை


பக்கம் 26

ஸம்பத்து - செல்வம், பொன்

ரக்ஷித்தல் - காத்தல்


பக்கம் 27

பதார்த்தம் - சொற்பொருள்;  வஸ்து;     திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேஷம், சமவாயம், அபாவம் என நியாயசாஸ்திரத்தில் வழங்கும் எழுவகைப்பொருள்கள்

விருத்தாந்தம் - வரலாறு ; கதை ; நிகழ்ச்சி ; செய்தி ; இயல்பு ; விதம் ; முழுமை ; இளைப்பாறுகை .

பக்கம் 28

ஜன்மாந்திரம் - மறுபிறப்பு

அத்யாத்மம் - ????

யதி - துறவி

ஓஷதி -  மருந்திற்குரிய பூடு முதலியவை , வருஷத்தில் ஒருமுறைகாய்த்துப்படுஞ்செடி

சிராத்தம் - இறந்தோர்பொருட்டுச் செய்யுஞ் சடங்கு


பக்கம் 30

ஸந்தி = கூடுகை

சஸ்திரதாரி = ஆயுதமேந்தியவர்

அக்ஷௌஹிணி = 21870 ரதங்கள் + 21870 யானைகள் + 1,09,350 பதாதிகள் + 60,610 குதிரைகள்

பக்கம் 31

பதாதிகள் - காலாட்படை

வைராக்கியம் - உலகப்பற்றின்மை, விடாப்பிடி

வியவஸ்தை - முடிவான ஏற்பாடு, வித்தியாசம்

பதம் - பக்குவம், இனிமை. வழி

உபதேசம் - ஞானபோதனை, மந்திரோபதேசம்

சிரேயஸ் - ஆன்மீக ஈடுபாடு  [ஆன்மிக மேன்மை]

Monday, October 21, 2013

ஆதி பர்வம் பக்கம் 6-15

பக்கம் 6

பிரஜை - குடி, சந்ததி

அண்டம் - முட்டை, பூமி, வானம், பிரபஞ்ச உருண்டை

பிரஜாபதி - பிரமன், உபப்பிரம்மா, அரசன்

ஸ்தாணு - உருத்திரளுள் ஒருவர்

ஸ்வாயம்புமனு - பிரம்ம புத்திரர்

ஸம்காரம் - அழிப்பு
[ஸம்ஸ்காரம் - பண்பாடு]

ருது - வசந்தருது. கிரீஷ்மருது. வர்ஷருது, சரத்ருது. ஏமந்தருது. சிசிரருது என்ற ஆறுபருவங்கள்

பக்கம் 7

ஸ்ருஷ்டி - படைத்தல், கற்பனை செய்தல்

உபாக்கியானம் - கிளைக்கதை

லக்ஷணம் - இலக்கணம், சாசனப்பத்திரம்

ஸங்க்ரஹம் - சுருக்கம்

பக்கம் 8

சிலாக்கியம் - மெச்சத்தக்கது, சிறந்தது, புகழ், உரிமை

ஸமர்த்தர் - திறமையானவர்

பக்கம் 9

நிச்சயம் - உறுதி, மெய், துணிவு

பக்கம் 10

கல்பங்கள் - பல யுகங்கள்

வஸ்து - பொருள்

பாசுபதம் - நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.

ஆஶ்ரமம் - குடில்; ப்ரம்மசர்யம், இல்லறம், வன வாழ்க்கை, துறவறம் எனும் படிநிலைகள்


ஹிந்து தர்மத்தின் படி,
முதலாம் பருவம் ப்ரும்மச்சர்யாஸ்ரமம் (தனக்காய்க் கற்றலும், கேட்டலும்);
இரண்டாம் பருவம் க்ருஹஸ்தாஸ்ரமம் (தன் குடும்பத்தின் பொருட்டுப் பொருளீட்டலும், இனவிருத்தியும்);
மூன்றாம் பருவம் வானப்ரஸ்தாஸ்ரமம் (தன் சமூகத்தை முன்னிறுத்திப் பொருட்பற்றைத் துறந்து புண்ணியம் எய்துதல்);
நான்காம் பருவம் சன்யாஸஆஸ்ரமம் (எல்லாவற்றையும் துறந்து வீடு பேறு எய்தல்)

அஞ்சனசலாகை - கண்ணுக்கு மையெழுதுங்கோல்

புருஷார்த்தங்கள் - அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய உறுதிப் பொருள்

பக்கம் 11

ஸங்கிரகம் - சுருக்கம்

ஸ்தானம் - இடம், உறைவிடம், சுவர்க்கம், ஆசனம்

அபீஷ்டம் -  விரும்பிய, அன்புள்ள

பக்கம் 12


உத்க்ருஷ்டம் -  சிறந்த; உயர்ந்தரகமான; 

(உயரமாக) எழுப்பப்பட்ட; (முழுபலத்துடன்)


பிடுங்கப்பட்ட,  (ஆழமாக)உழப்பட்ட‌
ஸர்வஜ்ஞர் - முற்றறிவினர்

சேதித்தல் - வெட்டுதல், அழித்தல்

ஸங்கியை - எண், எண்ணிக்கை, புத்தி

கவடு - மரக்கிளை

பக்கம் 13

சிஷ்டர்  -  நமக்கு வேண்டியவர், நெருங்கியவர், 

அண்மையானவர்(துஷ்டருக்கு எதிர்பதம்)

பக்கம் 14

துந்துபி - பேரிகை

பராக்கிரமம் - வீரம், வல்லமை

வினயம் - மரியாதை, அடக்கம்

பர்த்தா - கணவன்

தக்ஷிணை - குருமுதலிய பெரியோர்க்குக் கொடுக்கும் பொருள்

உபாயம் - உத்தி,ஆரம்பம்,முயற்சி,செயல்படல், வழிமுறை, சூழ்ச்சி


பக்கம் 15

வஸ்திரம் - துணி

உத்தரீயம் - மேலாடை, மார்பிலும் முதுகிலும் அணியும் படங்களுள்ள இருதுணித்துண்டு

யஜ்ஞம் - யாகம்

நிர்மாணம் - உருவாக்குதல்,படைத்தல்,செய்தல்

பரிதபித்தல் - வருந்துதல், துக்கித்தல்

தகித்தல் - எரித்தல், உஷ்ணஞ்செய்தல்

அப்பிரியம் - வெறுப்பு, வெறுப்பான செயல்

ஆதி பர்வம் பக்கம் 1 - 5

பக்கம் 1

அனுக்ரமணிகா பர்வம்கதையை வரிசைப்படுத்தி சொல்வது; அட்டவணை;  பொருளடக்கம்; முறையான அமைப்பு;வரிசைஅமைப்பு

ஸூத புராணிகர்  = ஸூத பெள‌ராணிகர்= புராண விரிவுரையாளர்; புராணக் 
கதையைச் சொல்லுபவர்.

அனுஸந்தித்தல் - சிந்தித்தல்,  சொல்லுதல்

மாத்வ  ஸம்பிரதாயம்த்வைதக் கருத்து பரப்பிய ஆச்சாரியர் மத்வாச்சாரியர் ஏற்படுத்திய வாழ்வியல் நடைமுறை;பாரம்பரியம்;
தொன்றுதொட்டுவரும்வழக்கம்;உபதேசமுறை

நரன் - ஆதிசேஷன்; மனிதன்

நரோத்தமன் - வாயு பகவான்; உத்தம மனிதன்; உயர்ந்த மனிதன்

பக்கம் 2

வியாபகன் -  [எங்குமிருப்பவன்] கடவுள்; எங்கும் அறியப்படுந் தன்மை படைத்தவன்; பிரபலமனவன்;(வ்யாபக=பரவுகிற,பரவலாக உள்ள)

ஸம்ஸாரம் - உலகத்தொடர்பு; உலகியல்; உலகம்; உலகியல் வாழ்க்கைப் போக்கு; குடும்பம்; மனைவி 

நிவிர்த்திவெளிநோக்கம் அற்ற நிலை; உலகியலில் இருந்து விலகும் 
மனப்பாங்கு; அகமுகமாக மனம் திரும்புதல்; வைராக்ய்ம்;பேரின்பம்;
விடுதலை

முக்குணங்கள் - சாத்வீகம்ராஜஸ‌ம் மற்றும் தாமசம் ஆகிய மூன்று குணங்கள்

வந்தனம் - வணக்கம்

குலபதி - குலத்துக்குத் தலைவன்;  10,000 மாணவர்க்கு உணவு முதலியன அளித்துக் கல்வி கற்பிக்கும் ஆசிரியன்

உத்தேசித்தல் - கருதுதல், மதிப்பிடுதல்

அன்னபானம் - சோறும் நீரும்

கர்த்தா - செய்வோன், வினைமுதல், கடவுள், தலைவன்

ரித்விக்குகள்யாகத்தில் பங்கு பெறும் வேத விற்பன்னர்கள்.யாக‌ம் செய்யும்
வேதம் பயின்றோர்

தபஸ் - தவம்

பக்கம் 3

ஸ்ரேஷ்டர்  - மேலோர்கள், ஞானிகள்

தபோதனர்தவமுனிவர்; தவம் செய்யும் பொருட்டு காட்டில் வசிக்கும் முனிவர்;  தவமிக்கவர்; தவத்தையே செல்வமாகக் கொண்டவர்.

அபிவிருத்தி - மேன்மேலும் பெருகுகை

குசலப்பிரஸ்னம் - சேமத்தைப் பற்றிய கேள்வி; ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொள்ளுதல்
('தாங்கள் நலமா? குடும்ப‌த்தார் நலமா? மழை 

உண்டா?'போன்ற வினாக்கள்)

சஞ்சரித்தல் - நடமாடுதல் ; வாழ்தல் ; திரிதல் ; நெறிதப்பி ஒழுகுதல்

பிரஸ்னம் - கேள்வி

நிஷ்டர்கள்உறுதித்தன்மை உடையவர்; திடமானவர்; சிரத்தை உடையவர்;
தேர்ச்சி உடையவர்(ப்ரம்ம நிஷ்ட்ட‌ர்)

தீர்த்தம் - புண்ணிய நீர்த்துறை

க்ஷேத்திரம்புண்ணியஸ்தலம்

பக்கம் 4

ஆஸ்ரயித்தல் - போற்றுதல், வணங்குதல், புகழுதல்

பரப்பிரம்மம்பரம் பொருள்=கடவுள்(உருவமற்ற இறை அமசம்)

பூர்வம் - ஆதி ; பழைமை ; முதன்மை ; முற்காலம் ;

சாஸ்திரம் = சாத்திரம், மனிதனால் படைக்கப்பட்டவிதிகள்,சட்டங்கள்,வாழ்வியல் 
முறைகள்; (ஸ்ருதி=கேட்கப்பட்டது
வேதம் = இறைவனால் கூறப்பட்டது; சாஸ்திரம்=ஸ்மிருதி=அதாவது மனிதனின் நாக்கல் உச்சரிக்கப்பட்டது) 

ஆஜ்ஞை - ட்டளை

ஸம்ஹிதை - வேதத்திற்கு ஒப்பான கிரந்தம்; தொகுப்பு; வேதத்தொகுப்பு; வேதப்பகுதி; பதச் சேர்க்கை

கிரந்தம் - நூல்

புருஷன் - பரமான்மா

ஈசானன் - சிவன்

சாஸ்வதன் - காலம் கடந்து, நிலையாக நிற்பவன்

பிரகிருதி  - இயற்கை நிலை,இயற்கை இயல்பு, இயற்கை உருவம், மாயை, சிவ தத்துவத்தில் சக்தி அம்சம், தாய்

ஜகத் எனும் உலகம் இரு மஹாபொருளால் உருவாக்கப்பட்டது. அது பிரகிருதி மற்றும் புருஷார்த்தம். பிரகிருதி என்பது பெண் தன்மை கொண்ட இறை நிலை. புருஷார்த்தம் என்பது ஆன்மா அல்லது ஜீவாத்ம நிலை.

பிரகிருதி புருஷனுடன் இணைவதால் நமக்கு கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்கள் உருவாகி, சாத்வ ரஜோ மற்றும் தமோ குண சேர்க்கைகள் ஏற்படுகிறது. இதனால் குணங்களை கடந்து பிரகிருதி நிலையில் புருஷார்த்த தன்மை இருந்தால் அதன் பெயர் ஜீவன் முக்தி.

ஜீவர்கள் -  மூச்சுக்காற்று, பிராணனை ஆதாரமாகக் கொண்டு வாழும் மக்கட் கூட்டம்

பரதத்துவம்பரம் பொருள் பற்றிய தத்துவக் கருத்துக்கள்

மங்களம்= சுபம், அதிர்ஷ்டம், நல்வாழ்த்து,

மங்களகரன் = மேற்கண்டவை உடையவன்

மங்களரூபன் ---- மேற்கண்ட அம்சங்களை கொண்ட அழகிய உருவம் உள்ளவன் 

ஸர்வவியாபி - எங்கும் நிறைந்தவன்

பக்கம் 5

ஜங்கமங்கள் - அசையும் உயிர்கள் - விலங்குகள், நீரில் வாழ்பவை, ஊர்வன

அபிப்ராயம் - நோக்கம், கருத்து

அனுக்கிரகம் - அருள்

ஆஸ்ரம தர்மங்கள் - பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம்

மூன்று லோகங்கள்பூமி,மேலுலகம், பாதாளம்(பூமிக்கடியில் உள்ள உலகம்)

வ்யவஹாரம் - சரித்திரம் முதலியவை; இவ்வுலக வாழ்க்கையில் நடைமுறையில் காணும் வழக்கம் ஒழுங்கு, வியாபாரம், வழக்கு ஆகியவை.

நித்தியம்  - சாசுவதம்

பூர்ணம் - முழுமை

நியமம்செய்கடன், வரையறுக்கை, விதி, நிச்சயம், முடிவு

பிரவேசித்தல் - உட்செல்லுதல்

பிரம்மசரியம்இந்திரிய ஜயம், புலனடக்கம்

இதிஹாஸம் - புராதன சரித்திரம்

யோகம் - புறப்பொருளை உள்ளே காணக்கூடிய சக்தி