Monday, October 21, 2013

ஆதி பர்வம் பக்கம் 1 - 5

பக்கம் 1

அனுக்ரமணிகா பர்வம்கதையை வரிசைப்படுத்தி சொல்வது; அட்டவணை;  பொருளடக்கம்; முறையான அமைப்பு;வரிசைஅமைப்பு

ஸூத புராணிகர்  = ஸூத பெள‌ராணிகர்= புராண விரிவுரையாளர்; புராணக் 
கதையைச் சொல்லுபவர்.

அனுஸந்தித்தல் - சிந்தித்தல்,  சொல்லுதல்

மாத்வ  ஸம்பிரதாயம்த்வைதக் கருத்து பரப்பிய ஆச்சாரியர் மத்வாச்சாரியர் ஏற்படுத்திய வாழ்வியல் நடைமுறை;பாரம்பரியம்;
தொன்றுதொட்டுவரும்வழக்கம்;உபதேசமுறை

நரன் - ஆதிசேஷன்; மனிதன்

நரோத்தமன் - வாயு பகவான்; உத்தம மனிதன்; உயர்ந்த மனிதன்

பக்கம் 2

வியாபகன் -  [எங்குமிருப்பவன்] கடவுள்; எங்கும் அறியப்படுந் தன்மை படைத்தவன்; பிரபலமனவன்;(வ்யாபக=பரவுகிற,பரவலாக உள்ள)

ஸம்ஸாரம் - உலகத்தொடர்பு; உலகியல்; உலகம்; உலகியல் வாழ்க்கைப் போக்கு; குடும்பம்; மனைவி 

நிவிர்த்திவெளிநோக்கம் அற்ற நிலை; உலகியலில் இருந்து விலகும் 
மனப்பாங்கு; அகமுகமாக மனம் திரும்புதல்; வைராக்ய்ம்;பேரின்பம்;
விடுதலை

முக்குணங்கள் - சாத்வீகம்ராஜஸ‌ம் மற்றும் தாமசம் ஆகிய மூன்று குணங்கள்

வந்தனம் - வணக்கம்

குலபதி - குலத்துக்குத் தலைவன்;  10,000 மாணவர்க்கு உணவு முதலியன அளித்துக் கல்வி கற்பிக்கும் ஆசிரியன்

உத்தேசித்தல் - கருதுதல், மதிப்பிடுதல்

அன்னபானம் - சோறும் நீரும்

கர்த்தா - செய்வோன், வினைமுதல், கடவுள், தலைவன்

ரித்விக்குகள்யாகத்தில் பங்கு பெறும் வேத விற்பன்னர்கள்.யாக‌ம் செய்யும்
வேதம் பயின்றோர்

தபஸ் - தவம்

பக்கம் 3

ஸ்ரேஷ்டர்  - மேலோர்கள், ஞானிகள்

தபோதனர்தவமுனிவர்; தவம் செய்யும் பொருட்டு காட்டில் வசிக்கும் முனிவர்;  தவமிக்கவர்; தவத்தையே செல்வமாகக் கொண்டவர்.

அபிவிருத்தி - மேன்மேலும் பெருகுகை

குசலப்பிரஸ்னம் - சேமத்தைப் பற்றிய கேள்வி; ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொள்ளுதல்
('தாங்கள் நலமா? குடும்ப‌த்தார் நலமா? மழை 

உண்டா?'போன்ற வினாக்கள்)

சஞ்சரித்தல் - நடமாடுதல் ; வாழ்தல் ; திரிதல் ; நெறிதப்பி ஒழுகுதல்

பிரஸ்னம் - கேள்வி

நிஷ்டர்கள்உறுதித்தன்மை உடையவர்; திடமானவர்; சிரத்தை உடையவர்;
தேர்ச்சி உடையவர்(ப்ரம்ம நிஷ்ட்ட‌ர்)

தீர்த்தம் - புண்ணிய நீர்த்துறை

க்ஷேத்திரம்புண்ணியஸ்தலம்

பக்கம் 4

ஆஸ்ரயித்தல் - போற்றுதல், வணங்குதல், புகழுதல்

பரப்பிரம்மம்பரம் பொருள்=கடவுள்(உருவமற்ற இறை அமசம்)

பூர்வம் - ஆதி ; பழைமை ; முதன்மை ; முற்காலம் ;

சாஸ்திரம் = சாத்திரம், மனிதனால் படைக்கப்பட்டவிதிகள்,சட்டங்கள்,வாழ்வியல் 
முறைகள்; (ஸ்ருதி=கேட்கப்பட்டது
வேதம் = இறைவனால் கூறப்பட்டது; சாஸ்திரம்=ஸ்மிருதி=அதாவது மனிதனின் நாக்கல் உச்சரிக்கப்பட்டது) 

ஆஜ்ஞை - ட்டளை

ஸம்ஹிதை - வேதத்திற்கு ஒப்பான கிரந்தம்; தொகுப்பு; வேதத்தொகுப்பு; வேதப்பகுதி; பதச் சேர்க்கை

கிரந்தம் - நூல்

புருஷன் - பரமான்மா

ஈசானன் - சிவன்

சாஸ்வதன் - காலம் கடந்து, நிலையாக நிற்பவன்

பிரகிருதி  - இயற்கை நிலை,இயற்கை இயல்பு, இயற்கை உருவம், மாயை, சிவ தத்துவத்தில் சக்தி அம்சம், தாய்

ஜகத் எனும் உலகம் இரு மஹாபொருளால் உருவாக்கப்பட்டது. அது பிரகிருதி மற்றும் புருஷார்த்தம். பிரகிருதி என்பது பெண் தன்மை கொண்ட இறை நிலை. புருஷார்த்தம் என்பது ஆன்மா அல்லது ஜீவாத்ம நிலை.

பிரகிருதி புருஷனுடன் இணைவதால் நமக்கு கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்கள் உருவாகி, சாத்வ ரஜோ மற்றும் தமோ குண சேர்க்கைகள் ஏற்படுகிறது. இதனால் குணங்களை கடந்து பிரகிருதி நிலையில் புருஷார்த்த தன்மை இருந்தால் அதன் பெயர் ஜீவன் முக்தி.

ஜீவர்கள் -  மூச்சுக்காற்று, பிராணனை ஆதாரமாகக் கொண்டு வாழும் மக்கட் கூட்டம்

பரதத்துவம்பரம் பொருள் பற்றிய தத்துவக் கருத்துக்கள்

மங்களம்= சுபம், அதிர்ஷ்டம், நல்வாழ்த்து,

மங்களகரன் = மேற்கண்டவை உடையவன்

மங்களரூபன் ---- மேற்கண்ட அம்சங்களை கொண்ட அழகிய உருவம் உள்ளவன் 

ஸர்வவியாபி - எங்கும் நிறைந்தவன்

பக்கம் 5

ஜங்கமங்கள் - அசையும் உயிர்கள் - விலங்குகள், நீரில் வாழ்பவை, ஊர்வன

அபிப்ராயம் - நோக்கம், கருத்து

அனுக்கிரகம் - அருள்

ஆஸ்ரம தர்மங்கள் - பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம்

மூன்று லோகங்கள்பூமி,மேலுலகம், பாதாளம்(பூமிக்கடியில் உள்ள உலகம்)

வ்யவஹாரம் - சரித்திரம் முதலியவை; இவ்வுலக வாழ்க்கையில் நடைமுறையில் காணும் வழக்கம் ஒழுங்கு, வியாபாரம், வழக்கு ஆகியவை.

நித்தியம்  - சாசுவதம்

பூர்ணம் - முழுமை

நியமம்செய்கடன், வரையறுக்கை, விதி, நிச்சயம், முடிவு

பிரவேசித்தல் - உட்செல்லுதல்

பிரம்மசரியம்இந்திரிய ஜயம், புலனடக்கம்

இதிஹாஸம் - புராதன சரித்திரம்

யோகம் - புறப்பொருளை உள்ளே காணக்கூடிய சக்தி

5 comments:

  1. அனுக்ரமணிகா பர்வம் = கதையை வரிசைப்படுத்தி சொல்வது; அட்டவணை;
    பொருளடக்கம்;முறையான அமைப்பு;வரிசைஅமைப்பு

    ஸூத புராணிகர் =ஸூத பெள‌ராணிகர்= புராண விரிவுரையாளர்; புராணக்
    கதையைச் சொல்லுபவர்.

    அனுஸந்தானம் = தொடர்ந்து ஆழ் சிந்தனையில் ஈடுபடுதல்;நாள்தோறும்
    வாசித்து ஆழ்ந்து சிந்தித்த‌ல்

    மாத்வ சம்பிரதாயம்= த்வைதக் கருத்து பரப்பிய ஆச்சாரியர் மத்வாச்சாரியர்
    ஏற்படுத்திய வாழ்வியல் நடைமுறை;பாரம்பரியம்;
    தொன்றுதொட்டுவரும்வழக்கம்;உபதேசமுறை

    நரன்= மனிதன்
    நரோத்தமன்= உத்தம மனிதன்;உயர்ந்த மனிதன்

    வ்யாபகன்=பிரபலமனவன்;(வ்யாபக=பரவுகிற,பரவலாக உள்ள)
    ஸ‌ம்சாரம்=உலகத்தொடர்பு;உலகியல்;உலகம்;உலகியல் வாழ்க்கைப் போக்கு;
    குடும்பம்;மனைவி
    நிவிருத்தி=வெளிநோக்கம் அற்ற நிலை;உலகியலில் இருந்து விலகும்
    மனப்பாங்கு;அகமுகமாக மனம் திரும்புதல்;வைராக்ய்ம்;பேரின்பம்;
    விடுதலை
    முக்குணங்கள்=சாத்வீகம், ராஜசம், தாமசம் ஆகிய முக்குணங்கள்.
    ரித்விக்குகள்=யாகத்தில் பங்கு பெறும் வேத விற்பன்னர்கள்.யாக‌ம் செய்யும்
    வேதம் பயின்றோர்
    தபோதனர்=தவமுனிவர்; தவம் செய்யும் பொருட்டு காட்டில் வசிக்கும் முனிவர்
    தவமிக்கவர்;தவத்தையே செல்வமாகக் கொண்டவர்.
    குஷ‌லப்பிரஸ்னம்=ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொள்ளுதல்
    ('தாங்கள் நலமா? குடும்ப‌த்தார் நலமா? மழை
    உண்டா?'போன்ற வினாக்கள்)
    நிஷ்ட்டர்= உறுதித்தன்மை உடையவர்;திடமானவர்;சிரத்தை உடையவர்;
    தேர்ச்சி உடையவர்(ப்ரம்ம நிஷ்ட்ட‌ர்)
    பரப்பிரம்மம்= பரம் பொருள்=கடவுள்(உருவமற்ற இறை அமசம்)
    சாஸ்திரம்=சாத்திரம், மனிதனால் படைக்கப்பட்டவிதிகள்,சட்டங்கள்,வாழ்வியல்
    முறைகள்; (ஸ்ருதி=கேட்கப்பட்டது=வேதம் இறைவனால்
    கூறப்பட்டது; சாஸ்திரம்=ஸ்மிருதி=அதாவது மனிதனின் நாக்கல்
    உச்சரிக்கப்பட்டது)
    ஸம்ஹிதா= தொகுப்பு;வேதத்தொகுப்பு;வேதப்பகுதி;பதச் சேர்க்கை
    ப்ரக்ருதி= இயற்கை நிலை,இயற்கை இயல்பு,இயற்கை உருவம்,மாயை,
    சிவ தத்துவத்தில் சக்தி அம்சம்,தாய்
    ஜீவர்கள்=மூச்சுக்காற்று,பிராணனை ஆதாரமாகக் கொண்டு வாழும் மக்கட்
    கூட்டம்

    பரதத்தவம்= பரம் பொருள் பற்றிய தத்துவக் கருத்துக்கள்
    மங்களம்= சுபம்,அதிர்ஷ்டம்,நல்வாழ்த்து,
    மங்களகரன்= மேற்கண்டவை உடையவன்
    மங்கள ரூபன்= மேற்கண்ட அம்சங்களை கொண்ட அழகிய உருவம் உள்ளவன்
    மூன்று லோகங்கள்= பூமி,மேலுலகம், பாதாளம்(பூமிக்கடியில் உள்ள உலகம்)
    வ்யவஹாரம்=இவ்வுலக வாழ்க்கையில் நடைமுறையில் காணும் வழக்கம்
    ஒழுங்கு,வியாபாரம்,வழக்கு ஆகியவை.

    ReplyDelete
  2. 1 =5 பக்கஙளில் முக்குணங்களில் 'ராட்சசம்' என்று குறிப்பிட்டுள்ளது 'ராஜஸ‌ம்' என்று இருக்க வேண்டும்.

    அதுபோலவே மற்றவைகளில் உள்ள் எழுத்துப்பிழை, கருத்துப்பிழைகள் மாற்ற வேண்டும்.

    ReplyDelete
  3. நன்றி திரு.கிருஷ்ணன். எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டுங்கள். உடனே மாற்றி விடுகிறேன்.

    ReplyDelete
  4. பிரம்மசரியம் - இந்திரஜயம் X
    இந்திரிய ஜயம், புலனடக்கம்

    ReplyDelete
    Replies
    1. மாற்றி விட்டேன் ஐயா. மிக்க நன்றி.

      Delete